Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.


தூத்துக்குடி 2019 செப் 19 ; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (19.9.2019) நடைபெற்றது.
இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்ற நீட்ஸ் திட்டத்தின் நேர்காணலில்; படித்த இளைஞர்கள் 6 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த 6 நபர்களும் நேர்காணலில் தேர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சுய தொழில் துவங்க கடன் பெற வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களுக்கு  திட்ட முதலீடு ரூ.4 கோடியில் அரசு மானியமாக ரூ.74 இலட்சம்  வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் கதர் கிராம தொழில் ஆணையம் மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் இணைந்து 117 நபர்களுக்கு பல்வேறு தொழில்களை துவங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முன்னதாக தொழில் வளர்ச்சியினை விரைவுப்படுத்திடவும், மேம்பாடு அடைய செய்திடவும், தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கை எளிமையாக்க தொழிற் கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் களைந்திட ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமம் / மின் இணைப்பு ஒப்புதல் ஆகியவற்றை எவ்வித சிரமுமின்றி விரைந்து வழங்கிட துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் டி.கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் திரு.விஜயகுமார், கிளை மேலாளர்  (டி.ஜ.ஜ.சி) முருகன், மேலாளர் சிட்கோ ஆனந்த், துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், உதவி இயக்குநர், (குறு, சிறு நடுத்தர தொழில்கள்) ஜெரினா, கிளை மேலாளர், இந்தியன் வங்கி தெய்வேந்திரன், ஒருங்கிணைப்பாளர், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி பாக்கிலெட்சுமி, மாவட்ட தொழில் மையம்  உதவி பொறியாளர் இராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo