Onetamil News Logo

மனைவியிடம் அன்புறவு வைத்த ஆசிரியரை வெட்டி கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது 

Onetamil News
 

மனைவியிடம் அன்புறவு வைத்த ஆசிரியரை வெட்டி கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது 


தூத்துக்குடி 2018 நவம்பர் 5: தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ்(வயது 59). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சத்யா தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்த பிரான்சிஸ்(52) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
இவர் மத்திய ரிசர்வ் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று வந்துள்ளார். இவர் திடீரென முன்னால் சென்று கொண்டு இருந்த அந்தோணி துரைராஜின் மோட்டார் சைக்கிள் மீது தனது மோட்டார் சைக்கிளை வைத்து மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறிய அந்தோணி துரைராஜ் கீழே விழுந்தார்.
உடனடியாக பிரான்சிஸ் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அந்தோணி துரைராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி துரைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஓய்வு பெற்ற அந்தோணி துரைராஜூம், பிரான்சிஸ் மனைவி அந்தோணி பவுலினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பள்ளியில் வேலை பார்த்து வந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்தோணி பவுலின் மகள் ஜெனோ செல்வமோனிசா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் அந்தோணி துரைராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  பிரான்சிசை போலீசார் கைது செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo