Onetamil News Logo

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக  தூத்துக்குடி புதிய துறைமுகம் சுத்தம் செய்தல்' பணி ;முதல்வர் முனைவர்.ப.வேலாயுதம் துவக்கி வைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 
தூத்துக்குடி புதிய துறைமுகம் சுத்தம் செய்தல்' பணி ;முதல்வர் முனைவர்.ப.வேலாயுதம் துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி 2019 மார்ச் 12 ; தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 'தூத்துக்குடி புதிய துறைமுகத்தை சுத்தம் செய்தல்' நடைபெற்றது                                                                    
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக 10.03.2019 அன்று தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர்.ப.வேலாயுதம் துவக்கி வைத்து பேசும் போது... பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் 'நெகிழி இல்லா தமிழகம்' உருவாக அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு; புதிய துறைமுகத்தில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளான நெகிழிப் பை, மீன்பிடி வலைகள் போன்றவற்றை சுத்தம் செய்தனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கடற்கரையில் நெகிழி ஒழிப்பு சம்பந்தமான 'மணல் ஓவியங்கள்' வரைந்து பொதுமக்களை ஈர்க்கும் வண்ணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் இந்த புதிய முயற்சியினை அனைவரும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி  த. ரவிக்குமார்  ஒருங்கிணைத்தார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo