Onetamil News Logo

சுட்டி விகடன் சார்பில் தூத்துக்குடி ஊரை தெரிஞ்சிகிட்டோம் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவித்து கேடயம் வழங்கும் விழா  ;கலெக்டர் பங்கேற்பு 

Onetamil News
 

சுட்டி விகடன் சார்பில் தூத்துக்குடி ஊரை தெரிஞ்சிகிட்டோம் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவித்து கேடயம் வழங்கும் விழா  ;கலெக்டர் பங்கேற்பு 


 தூத்துக்குடி 2019 அக்டோபர் 20 ;தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சுட்டி விகடன் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இணைந்து நடத்திய ஊரை தெரிஞ்சிகிட்டோம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கேடயங்களை வழங்கினார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சுட்டி விகடன் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இணைந்து நடத்திய தூத்துக்குடி 200 ஊரை தெரிஞ்சிகிட்டோம் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவித்து கேடயம் வழங்கும் விழா இன்று (20.10.2019) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி கவுரவித்தார். 

விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 20ம் தேதி சிறப்பானதொரு நாளாகும். ஏனெனில் 33 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 20ம் தேதிதான் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேநாளில் இவ்விழா நடைnறுவது சிறப்புக்குரியது ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகள் 200 அடங்கிய இன்போ புக் வெளியிடப்பட்டு இப்புத்தகத்தில் உள்ள சிறப்புகளில் இருந்து ஊரை தெரிஞ்சிகிட்டோம் என்ற போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற இன்போ தேர்வுகளை மாணவ, மாணவிகள் எழுதுவதால் அது உங்களுக்கு பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு முன்னுதாரணமாக அமையும். இப்போட்டியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மாணவ, மாணவிகள் செல்போனில் அதிக நேரம் இருக்காமல் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த தூத்துக்குடியில் புத்தக திருவிழா கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பார்வையிட்டுள்ளனர். இது புத்தக வாசிப்பை மேலும் ஊக்கப்படுத்தும். உலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள செய்தித்தாள் வாசிப்பு முக்கியமான ஒன்றாகும். எனவே, மாணவ, மாணவிகள் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப்போல பொது அறிவு நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவைகளையும் அறிந்து சிறந்து விளங்க வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் சுட்டி விகடன் நிறுவனத்தாருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, விகடன் குழும துணைத்தலைவர் சுந்தர் தியாகராஜன், சுட்டி விகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் கணேசன் கலந்து கொண்டார். 
தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் விகடன் இதழின் தலைமை நிருபர் இ.கார்த்திகேயன், ஒருங்கிணைப்பு செய்தார்.விகடன் குழும தென்மண்டல விற்பனை பிரிவு மேலாளர் செந்தில்குமார் நன்றியுரை ஆற்றினார்.
 சுட்டி விகடன் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். விழா நிகழ்ச்சிகளை பத்திரிகையாளர் எஸ்.ஜெகஜீவன் தொகுத்து வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo