Onetamil News Logo

ரூ.14 கோடி மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை கருவி மற்றும் ரூ.2.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இதயவியல் பிரிவு ;   தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடியில் தொடங்கிவைக்கிறார்   

Onetamil News
 

ரூ.14 கோடி மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை கருவி மற்றும் ரூ.2.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இதயவியல் பிரிவு ;   தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடியில் தொடங்கிவைக்கிறார்   


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 19 ;தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைப்பதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம் மற்றும் ரூ.14 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை கருவி  மற்றும் ரூ.2.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இதயவியல் பிரிவு, ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரகம் டயாலிஸ் பிரிவினை தமிழ்நாடு முதலமைச்சர்  22.02.2020 அன்று திறந்து வைப்பதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகம், உறைவிட மருத்துவர் சைலேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo