Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சி வஉசி மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய திருநெல்வேலி தட்சிணமாற நாடார் சங்கம் கடும் எதிர்ப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சி வஉசி மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய திருநெல்வேலி தட்சிணமாற நாடார் சங்கம் கடும் எதிர்ப்பு 


தூத்துக்குடி 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை ;தூத்துக்குடியில், வி.இ சாலையில் உள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு திருநெல்வேலி தட்சிணமாற நாடார் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தி்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து திருநெல்வேலி தட்சிணமாற நாடார் சங்கம் தலைவர் காளிதாசன் நாடார்,சண்முகவேல் நாடார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு  ;தூத்துக்குடி வஉசி மார்க்கெட் அருகில் வி.இ ரோட்டில் அந்தோணியார் ஆலயம்  முன்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தட்சிணமாற நாடார் சங்கம் சார்பில் 7 அடி உயரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கும் காமராஜர் பிறந்தநாள், நினைவு நாளில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.ஆகையால் தூத்துக்குடி மாநகராட்சி வஉசி மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய திருநெல்வேலி தட்சிணமாற நாடார் சங்கம் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. 
 தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காமராஜர் சிலையை அகற்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo