தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி 2021 ஜனவரி 17 ; தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (17.01.2021)மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ.;நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விளாத்திக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மானவாரி பயிர்கள் செய்யும் இடம் வடக்கு பகுதிகளில் கோவில்பட்டி தாலுகா, கயத்தாறு தாலுகா, புதூர் தாலுகா, விளாத்திகுளம,; எட்டையபுரம,; மானவாரி விவசாயிகள் அதிகமாக உள்ளது பொதுவாக உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயிர், கம்பு, மானவாரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. பருத்தி வெங்காயம் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதம் பயிரிடப்பட்டு டிசம்பர், ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும்
அறுவடை செய்யும் நேரத்தில் நமக்கு அதிகமான மழை பெய்துள்ளதால் நமக்கு அதிகமான சேதம் அடைந்துள்ளது. அந்த சேதத்தை மாவட்டம் முழுவதும்; கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 1,40,000 - லிருந்து 1,50,000 ஹொக்டர் அளவுக்கு மானவாரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதில் 60,000 ஹொக்டர் அளவு உளுந்து தான் இருக்கிறது. 40,000 ஹொக்டர் அளவு மக்காச்சோளம் 20,000 ஹொக்டர் அளவு பாசிப்பயிர்கள் கம்பும் ஆகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றது.
அனைத்து பகுதிகளிலும் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என்று இன்றைக்கு நாம் கணக்கு எடுத்துள்ளோம். இன்று வரை மாவட்டத்தில் வேளாண்துறையில் 22,500 ஹொக்டர் பயிர் சேதம், தோட்டக்கலையில் 5400 ஹொக்டர் பயிர் சேதம் அடைந்துள்ளதை கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, புள்ளியில் துறையின் மூலம் கணக்கு எடுக்கப்பட்டு 100 சதவீதம் இழப்பீடு தொகை காப்பீடு தொகையும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மொகைதீன் மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வேளாணமை)பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஐயா விளாத்திக்குளம் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் சேர்மன் சுசிலா தனஞ்nஐயந்த்,முன்னாள் சேர்மன் என்.கே.பி.வரதராஐபெருமாள் மாவட்;ட கவுன்சிலர்கள் நடராஐன், ஞானகுருசாமி, மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்