Onetamil News Logo

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்  வரலாற்றுத்துறை சார்பாக மதநல்லிணக்க நாள் கருத்தரங்கம்   

Onetamil News
 

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்  வரலாற்றுத்துறை சார்பாக மதநல்லிணக்க நாள் கருத்தரங்கம்   


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ;ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்  வரலாற்றுத்துறை சார்பாக மதந்லிணக்க நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது வரலாற்றுத்துறை மாணவிகள் 130 பேர் கலந்துகொண்டார்கள் கல்லூரி முதல்வர் மீராகுமாரி வரவேற்புரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் கணித்துறை தலைவர் பழனி இந்து மதத்தின் கோட்பாடுகள் மற்றும் பகவத்கீதையிலுள்ள நற்சிந்தனைகள், மனம், ஆன்மா, யோகநிலைப் பற்றிய செய்திகளை மாணவிகளுக்கு கூறினார்கள். திருநெல்வேலி சாரா டக்கர் கல்லூரி பேராசிரியர் வைஜோ பிரேமா  கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றியும் பைபிளில் மனித வாழ்க்கை முறைப்பற்றியும் அழகாக கூறினார்கள். காயல்பட்டினம் ஸுபைதா மேல்நிலையப்பள்ளி ஆசிரியர் செய்யது ராபியா  இஸ்லாம் மதத்தைப் பற்றியும் குரானில் கூறப்பட்டுள்ள தனிமனித ஒழுக்கமுறைப்பற்றியும் கூறினார்கள். வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் சங்கீதா  நன்றியுரை வழங்கினார்கள். இறுதியில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo