Onetamil News Logo

தூத்துக்குடி ஹௌசிங்போர்டு-யில் குடிநீர் குழாய் உடைந்து 6-மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.மாநகராட்சி சரிசெய்யுமா? பொதுமக்கள் குற்றச்சாட்டு 

Onetamil News
 

தூத்துக்குடி ஹௌசிங்போர்டு-யில் குடிநீர் குழாய் உடைந்து 6-மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.மாநகராட்சி சரிசெய்யுமா? பொதுமக்கள் குற்றச்சாட்டு 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 9 ;தூத்துக்குடி பழைய 5வது வார்டு,தற்சமயம் 3வது வார்டு, எட்டையாபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் குடியிருப்பு பகுதியில்,குடிநீர் குழாய் உடைந்து ஆறு  மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.
தூத்துக்குடி பழைய 5வது வார்டு,தற்சமயம் 3வது வார்டு, பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் வீணாக குடிநீர் சென்று கொண்டு இருப்பதை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக அப்பகுதி மக்கள்  குற்றம் சாட்டினார்கள்.  
அந்தத் தெருவில் செல்லக்கூடிய மாநகராட்சி குடிநீர் குழாய் ஆனது உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே குடிநீர் விநியோகம் வரும் சமயத்தில், குழாயின் உடைப்பு வழியாக குடிநீரானது வீணாக சாலைகளில் செல்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு உரிய தகவல் வழங்கியும்,கோரிக்கை விடுத்தும்  இதுவரை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மிகவும் அலட்சியமாக மெத்தனப்போக்கோடு மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo