Onetamil News Logo

முதியோர் இல்லத்தில் முதியவருக்கான நிமோக்காக்கல் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  

Onetamil News
 

முதியோர் இல்லத்தில் முதியவருக்கான நிமோக்காக்கல் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  


தூத்துக்குடி மாவட்டம்  நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்தில் முதியவருக்கான நிமோக்காக்கல் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து  பார்வையிட்டார். 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த வாரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மூலம் நிமோக்காக்கல் தடுப்பூசி போடும் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. நிமோனியா    நோய்; 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு அதிக அளவில் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த நோயினால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக நிமோக்காக்கல் தடுப்பூசி முதியோர்களுக்கு போட அரசு உத்தரவிட்டுள்ளது.  அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்தில் நிமோக்காக்கல் தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த முதியோர் இல்லத்தில் உள்ள சுமார் 50 முதியோர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், இந்த முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு வருவாய் துறை மூலம் முதியோர் உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட ஒரே இல்லமாக நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இல்லங்கள் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதியோர்களுக்கு தேவையான அனைத்து வகையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட இல்லத்தின் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். முதியோர்களுக்கு அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெற துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். 
நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோ ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.கு.தனலட்சுமி, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.வேலு பிரகாஷ் நாராயணன் மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள், முதியோர்கள் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo