Onetamil News Logo

பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை : விவசாயிகள், அமமுக கட்சியினர் முற்றுகை 

Onetamil News
 

பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை : விவசாயிகள், அமமுக கட்சியினர் முற்றுகை 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 19 ;தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது, பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக கூடி வருகிறது. இந்நிலையில் சுற்று வட்டார பகுதிகளிலும் விவசாயப் பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ்,தலைமையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆத்தூர் நகர செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் சுப்புதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து  விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் அணையில் இருந்து, கார் பருவ சாகுபடிக்காக, ஜீன் 1-ஆம் தேதி வழக்கமாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். 143 அடி கொள்ளவு கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 110 அடி தண்ணீர் உள்ளது. 
பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி வடகால், தென்கால் பாசன விவசாயிகள் மற்றும் அமமுக கட்சியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo