Onetamil News Logo

தூத்துக்குடியில் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாட்டம்

Onetamil News
 

தூத்துக்குடியில் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாட்டம்


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ;அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் தமிழக அரசு உணவுப் பொருள் வழங்கல் பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆதரவுடனும் எம்பவர் நிறுவன ஒருங்கிணைப்புடனும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.  தொடர்ந்து கல்லூரியில் இன்று உலக நுகர்வோர் உரிமைகள்; தினம் கொண்டாடப்பட்டது.  இதில் தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் (பொ) மற்றும் எம்பவர் நிறுவன தலைவருமான சங்கர் நுகர்வோர் உரிமைகள் குறித்து உரையாடினார்.  மேலும்; கல்லூரி மாணவியர்  நுகர்வோரின் பிரச்சனைகளை உணர்ந்து கொள்ளவும் அதற்கான தீர்வுகளை அறிந்து கொள்ளவும் தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் மன்ற நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.  மாணவிகளின் சந்தேகங்களுக்கு, குறைநீர் மன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் உறுப்பினர்கள் சங்கர், சரஸ்வதி ஆகியோர் விளக்கமளித்தனர்.  மேலும் மாணவியர் தூத்துக்குடி வீனஸ் ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் கேஸ் ப்ளாண்ட்க்கும் சென்று பார்வையிட்டு விழிப்புணர்வு பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர்.அ.ஜாய்சிலின் சர்மிளா வழிகாட்டுதலுடன்கல்லூரி உதவிப்பேராசிரியரும் கல்லூரி குடிமக்கள்; நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான முனைவர் நா.சுதாகுமாரி செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo