Onetamil News Logo

31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டுவாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தொடங்கிவைத்தார்.

Onetamil News
 

31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டுவாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தொடங்கிவைத்தார்.


தூத்துக்குடி 2020 ஜனவரி  24 ; தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டுவாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,  தலைமையில் இன்று நடைபெற்றது. 
31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹாலில் வைத்து இன்று (24.01.2020) நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,துவக்கி வைத்தார்கள். 
 பின்னர் அவர் பேசும் போது, தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருவது பற்றியும், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்;, சாலை விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை ஓட்டுவதில்,  ஓட்டுனர்களின் பங்கு மற்றும் கண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறினார்;.  
       இந்த முகாமில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், வாகன ஓட்டுனர்கள் சுமார் 100 பேர் மற்றும் காவல்துறையினர் கண் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்றனர்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo