Onetamil News Logo

தூத்துக்குடியில் மருதகுல மக்கள் இயக்கத்தின் 2 -ம் ஆண்டு விழா ;எம்.ஓம் சக்தி சங்கர் பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் மருதகுல மக்கள் இயக்கத்தின் 2 -ம் ஆண்டு விழா ;எம்.ஓம் சக்தி சங்கர் பங்கேற்பு 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 11 ; தூத்துக்குடியில் மருதகுல மக்கள் இயக்கத்தின் 2 -ம் ஆண்டு விழா நடைபெற்றது. 
இந்த விழாவிற்கு தியாகி இம்மானுவேல் பேரன் தமிழ்நாடு மருதகுல மக்கள் இயக்க மாநில தலைவர் பீட்டர் சாமுவேல் தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுடலைமணி முன்னிலை வகித்தார்.விழாவிற்கு கப்பல் ஒட்டிய தமிழன் வ.உ.சி.யின் பேரன் எம்.ஓம் சக்தி சங்கர் பங்கேற்று ஏழை,எளிய மாணவ ,மாணவியருக்கு இலவசநோட்டு புத்தகங்களை வழங்கினார்.
இதில் மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் காந்திராஜன் தேவர்,மாவட்ட விவசாய அணி தலைவர் ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ சேசுமணி தெய்வேந்திரன்,  மாவட்ட விவசாய அணி செயலாளர் ஓய்வுபெற்ற எஸ்.ஐ சீனிவாச நாயக்கர் ,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நாஞ்சில் பாபு பறையனார்,ஒன்றிய ஆலோசகர் சுந்தர்,தூத்துக்டுடி மாவட்ட தொழிற் சங்க செயலாளர் செண்பகராஜ் நாயக்கர்,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி பறையனார்,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராமர்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆறுமுகம்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜி என்ற மாரியம்மாள்,தூத்துக்குடி மாநகர செயலாளர் மைதீன், தூத்துக்குடி ஒன்றிய மகளிர் அணி தலைவி சுப்புலெட்சுமி ,உட்பட பலர் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo