சாலையோரங்களில் உள்ள மண் குவியல்களால் விபத்து
தூத்துக்குடி ஜனவரி 12 ;தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல முக்கிய பகுதிகளில் சாலைகளில் மண் குவியல் இருப்பதை கண்டித்து சமூக ஆர்வலர் அக்ரி.எஸ்.பரமசிவன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது..
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர் ரோடு, பாளையங்கோட்டை ரோடு, மதுரை ரோடு ,துறைமுகம் செல்லும் சாலை மற்றும் மாநகர சாலைகள் என பல்வேறு சாலைகளின் ஓரங்களில் மண்கள் நிறைந்து குவியல்களாக காணப்படுகின்றன. இவ்வாறு மண்நிறைந்த சாலைகளில் பயணம் மேற்கொள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் சறுக்கி விழும் சூழலில் விபத்துகளும் ஏற்படுகின்றன.எனவே உயர்திரு மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி ஆணையர் மற்றும் நெடுஞ்சாலை பொறியாளர் ஆகியோர் உடனடியாக சாலையோரங்களில் உள்ள மண் குவியல்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.