Onetamil News Logo

எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு என்று தூத்துக்குடி டாஸ்மாக் விற்பனையாளர்கள் சர்வசாதாரணமாக பேசும் அவலம் ;கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? 

Onetamil News
 

எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு என்று தூத்துக்குடி டாஸ்மாக் விற்பனையாளர்கள் சர்வ சாதாரணமாக பேசும் அவலம் ;கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? 


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 21: தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் அதிகம் வைத்து, குடிமகன்களிடம் வசூல் செய்கின்றனர்.தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு,18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மதுபான கடை மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுதோறும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. ஒரு டாஸ்மாக் கடையில், இரண்டு விற்பனையாளர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மதுபான பாட்டில் விலை   95ரூபாய், 110 ரூபாய், 140 ரூபாய், 180 ரூபாய்,200 ரூபாய்  என்றும் என, "ரவுண்ட்' செய்து, "எம்.ஆர்.பி.,' விலை அச்சிட்டு வினியோகம் செய்தது.ஆனால் டாஸ்மாக் கடையில்100ரூபாய், 115 ரூபாய், 145 ரூபாய், 185 ரூபாய்,205 ரூபாய்  என்று டாஸ்மாக் கடையில் விற்பனை செய்கிறார்கள், பீர் பாட்டில் 120 ரூபாய், கூலிங் 150 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைகளில் பிரிட்ஜ் கிடையாது,பார்களில் தான் பிரிட்ஜ்  வைத்து கூலிங் வைத்து விற்பனை செய்கிறார்கள்.அதனால், டாஸ்மாக் விற்பனையாளர்கள், மீதி காசை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து,அரசுக்கு புகார்கள் சென்றது.பீர் பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், விற்பனையாளர்கள் ஒரு பாட்டிலுக்கு, ஐந்து ரூபாய் அதிகமாக வாங்கி வந்தனர்.பல ஆண்டுகளாக உபரி வருமானம் பார்த்து வந்த டாஸ்மாக் விற்பனையாளர்கள், பிராந்தி, விஸ்கி, ரம் பாட்டிலுக்கும் கூடுதலாக ஐந்து ரூபாய் வைத்து விற்பனை செய்கின்றனர். "குடி'மகன்கள் கூடுதல் காசு கேட்பது கேட்டால், "எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு' என்று விற்பனையாளர்கள் சர்வசாதாரணமாக பேசுகின்றனர். பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல், விற்பனையாளர்கள் கேட்கும் காசை கொடுத்து விட்டு பாட்டிலை வாங்கிச் செல்லும் நிலையில் குடிமகன்கள் உள்ளனர். இதனால், டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஒவ்வொருவரும், தினமும் "குடி' மகன்கள் தலையில் மிளகாய் அரைத்து, 5000 ரூபாய் வரை வசூல் பார்த்து விடுகின்றனர். குடிமகன்களிடம் காசு பறிக்கும் டாஸ்மாக் ஊழியர்களை, உயர் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.தூத்துக்குடி டாஸ்மாக் விற்பனையாளர்கள் சர்வசாதாரணமாக பேசும் அவலம் என்று குடிமகன்கள் கேட்கின்றனர். தூத்துக்குடி  கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா ?   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo