Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பான சேவை செய்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு தமிழக அரசு சிறப்பு விருது!!

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பான சேவை செய்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு தமிழக அரசு சிறப்பு விருது!!


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 14 ;ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியதற்க்காக 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத் திறனாளிகள். 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பொருட்டு 17.07.2020 அன்று தேர்வுக் குழுவின் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலாளர்  தலைமையில் நடைபெற்றது. விருதுகளுக்கென பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி, 2020 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு  மாநில விருது வழங்கப்பட உள்ளது.இவ்விருதினை சுதந்திர தினவிழாவின் போது வழங்கலாம் என முடிவு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo