Onetamil News Logo

காமராஜ் கல்லூரியில் தமிழர் திருநாளையொட்டிசமத்துவபொங்கல் கொண்டாட்டம்

Onetamil News
 

காமராஜ் கல்லூரியில் தமிழர் திருநாளையொட்டிசமத்துவபொங்கல் கொண்டாட்டம்



தூத்துக்குடி 2019 ஜனவரி 13 ;காமராஜ் கல்லூரியில் தமிழர் திருநாளையொட்டி சமத்துவபொங்கல் கொண்டாட்டம் நடந்தது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழர் திருநாளை யொட்டி ஒவ்வொரு வகுப்பு வாரியாக மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து பொங்கலிட்டு இயற்கையை வழிபட்டனர்.  
ஓவ்வொரு வகுப்பு வாரியாக மொத்தம் 33 பானைகளில் பொங்கலிட்டு மாணவ, மாணவியர்கள் பொங்கலோ பொங்கல் வாழ்த்துடன் கல்லூரி வளாகம் சமத்துவத்தை முன்னிறுத்தி தமிழனின் பாரம்பரியத்தை பறைசாற்றியது. கல்லூரி சார்பில் கல்லூரி அலுவலகத்தின் முன்புள்ள காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வண்ணமாக பொங்கலிட்டனர்.  இப்பொங்கலினை கல்லூரியின் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கரும்பு,பனை ஓலை தோரணங்களுடன் காய்கறி வகைகள் பலபடைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.  பொங்கலினை அனைவருக்கும் வாழை இலையில் வைத்து பரிமாறினர்.  பொங்கல் இடும் வைபத்தினை சிறப்பாக செய்திருந்த அனைவருக்கும் கல்லூரிஅலுவலர்கள் சரவணன்,மகேஷ்வரி மற்றும் அர்ச்சனா சிறப்பு  நினைவு பரிசுகளை வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்களும், அலுவலர்களும் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo