Onetamil News Logo

சொத்து வரியை குறைத்திட மாநகராட்சி ஆணையருக்கு ;பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை 

Onetamil News
 

சொத்து வரியை குறைத்திட மாநகராட்சி ஆணையருக்கு ;பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை 


தூத்துக்குடி  2019 மே 17 ; பழைய நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளை விட புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தான் மிக அதிகமான  வரி ; சொத்து வரியை குறைத்திட மாநகராட்சி ஆணையருக்கு ;பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைந்த ஊராட்சி பகுதிகளுக்கு பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைத்திட மாநகராட்சி ஆணையருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்; பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் :-
தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நேரத்தில் தூத்துக்குடி ரூரல், சங்கரபேரி, மீளவிட்டான,; முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு முறையே 1, 2, 5, 17, 18, 48, 49, 50, 51 – 60 ஆகிய 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டது.
இந்த வார்டு பகுதிகளுக்கு பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளான சாலை வசதி,  சீரான குடிநீh,; கழிவுநீர் வடிகால்,  சுகாதார வசதி எதுவும் முழுமை பெறவில்லை.  ஆனால் வீட்டுத் தீர்வை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக 09.08.2018 அன்றைய சொத்துவரி கேட்பு அறிவிப்பில் 2018- 2019 இரண்டாம் காலாண்டுக்கு வரி செலுத்த சொல்லி பொதுமக்கள் வரி கட்டியுள்ளார்கள். 
தற்சமயம் 26.04.2019 அன்று வழங்கப்பட்டுள்ள சொத்துவரி கேட்பு அறிவிப்பில்  2017 – 2018 முதல்  2019 – 2020 வரையான காலத்திற்கு புதிதாக சொத்துவரி அதுவும் பலமடங்கு உயர்த்தி நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே 2018 – 2019 ஆண்டுவரை செலுத்திய தொகையையும் மீண்டும் செலுத்த  சொல்வது சரியா?
 
இந்த வரி உயர்வானது பொதுமக்களை மிகவும்  பாதிக்கும் ஒரு செயலாகும்.  அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் சொத்துவரியை பல மடங்கு உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்?  பழைய நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளை விட புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தான் மிக அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறு சீராய்வு செய்து குறைத்து அறிவித்திட கேட்டுக் கொள்கிறேன். மறுசீராய்வு  செய்யாதபட்சத்தில் தி.மு.கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo