மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் -க்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக கோரிக்கை
தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 13 ;மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் -க்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது...1. தூத்துக்குடி மாவட்டத்தில காற்று, மழைக் காலம் ஆரம்பமாகி இருப்பதால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்கள், மிகத் தாழ்வாக தொங்கிய நிலையிலுள்ள மின்கம்பிகள், இவைகளை உடனடியாக மாற்றியமைத்து விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் எட்டயபுரம், உடன்குடி பகுதிகளில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து ஆடு, மாடுகள் பலியாகியும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மின்வாரியத்தின் அலட்சிய போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. மிகவும் பலவீனமாக திறன் குறைவாக உள்ள மின் மாற்றிகளை ஆய்வு செய்து உடனடியாக மாற்றி மழை மற்றும் காற்று காலங்களில் பொது மக்களுக்கு உதவிட உரிய நடவடிக்ககை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காற்று, மழைக்காலங்கள் ஆரம்பமாகி உள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில், பல இடங்களில் பழுதான மின் கம்பங்கள் செயல்பாட்டில் உள்ளது. சில இடங்களில் மிகவும் மோசமான நிலையில் மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று மற்றும மழை பெய்யும் நேரங்களில் அந்த உறுதியற்ற மின் கம்பங்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பல இடங்களில் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் பலத்த காற்று வீசும் நேரத்தில் கீழே விழுந்து விடும் அபாய நி;லையில் உள்ளது. இதனால் பல விபத்துகள் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்படும் பொழுது பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும். பல இடங்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டு இருப்பதாலும் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே இவைகளை உடனடியாக மாற்றி பொது மக்களுக்கு உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் எட்டயபுரம், உடன்குடி போன்ற பகுதிகளில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து ஆடு, மாடு போன்ற கால்நடைகள் இறந்ததற்கு மின் வாரியம் சரியாக செயல்படாததே காரணம் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றும் மின்வாரியம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை. தொடர்ந்து அலட்சிய போக்கினை மேற்கொண்டு செயல்பட்டு வரும் மின்வாரியத்தின் சீர் கேடுகளை கண்டிக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், விரைவில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம், அலுவலக முற்றுகை போராட்டங்கள் நடத்த இருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பலவீனமாக உள்ள, திறன் குறைவாக உள்ள மின் மாற்றிகளை ஆய்வு செய்து உடனடியாக மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மேற்கண்ட குறைகளில் உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்துகளை தடுத்து மின் நுகர்வோர்களுக்கு உதவிட அதில் இவ்வாறு கூறினார்.