Onetamil News Logo

ரயிலில் பணிக்கு வந்த 3 தொழிலாளர்களுக்கு காய்ச்சல் அறிகுறி ;அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தனி மருத்துவமனை ;மாவட்ட ஆட்சியர் தகவல்

Onetamil News
 

ரயிலில் பணிக்கு வந்த 3 தொழிலாளர்களுக்கு காய்ச்சல் அறிகுறி ;அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தனி மருத்துவமனை ;மாவட்ட ஆட்சியர் தகவல்


தூத்துக்குடி 2020 மார்ச் 23 ;தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஒன்றினை கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தனி மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் பகுதியில் இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், 3 பேருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்து கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக 3 பேரையும் அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்களை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 120 பேருக்கு அவர்கள் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற உள்ளது. அதைப்போன்று வெளிநாடுகளில் வந்து கணக்கில்லாத 30 பேரை கண்டுபிடித்து உள்ளோம்.அவர்களை கண்டறிவதற்காக காவல்துறை. வருவாய்த்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு தான் அதிகமாக கொரோனா தொற்று உள்ளது.அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு (சமூக தொற்று) வரமால் இருப்பதற்காகத்தான் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் வெளிநாடு போய் வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.கண்காணிப்பு உள்ள அனைவருக்கும் தினமும் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் முக்கிய அலுவலர்கள் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.நாளைக்கு அமல்படுத்த உள்ள 144 தடை உத்தரவினால் அத்யாவசிய பொருட்கள் விற்பனைக்கு எவ்வித தடையும் இல்லை, தேவைப்பட்டால் காய்கறி மார்க்கெட் 24மணிநேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்படும்.அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் மட்டுமே பொது மக்கள் வெளியே வர வேண்டும்.இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் வெளியே விளையாடி வருகின்றனர், கொரோனாவின் பாதிப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்,பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்தால்தான் நோய் தொற்று தடுக்கமுடியும்,தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனையில் ஒன்றினை கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தனி மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா அறிகுறி தென்பட்டால் பொது மக்கள் சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனை அரசினால் அடையாளம் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகள் குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ரயிலில் பணிக்கு வந்து 3 தொழிலாளர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது.அந்த மூன்று பேரும் கோவில்பட்டி அரசு மருத்துமனையில் தனிய படுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் ரத்த மாதிரி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதன் முடிவு தெரிய ஒரு நாளாகும்.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் வந்தவர்கள் குறித்தும் காவல்துறையினர் விபரங்களை சேகரித்து வருகின்றனர்,அவர்கள் அனைவரும் பரிசோதிக்க உட்படுத்தப்பட்டு தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க படுவார்கள்,மாஸ்க் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படுவது மட்டுமன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற வணிக நிறுவனங்களை அடைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதா, கோட்டாச்சியர் விஜயா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo