Onetamil News Logo

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ;கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ;கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 19 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.17,865/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள முஸ்லீம் மகளிர்க்கு சுயதொழில் புரிவதற்கு முழு மானியத்துடன் கூடிய நிதியுதவி; வழங்கும் திட்டத்தின்கீழ் 10 மகளிர்க்கு தலா ரூ.10,000/- வீதம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினையும், வேளாண்மைத்துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் 2 விவசாயிகளுக்கு ஆழ்துளைக்கிணறு, பைப்லைன் அமைத்தல் மற்றும் மின்மோட்டார் நிறுவுவதற்கு பின்னேற்பு மானியம் தலா ரூ.50,000/- வீதம் ரூ.1 லட்சத்துக்கான உத்தரவு கடிதத்தினையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் கருணை அடிப்படையில் ஒருவருக்கு அங்கன்வாடி பணியாளர் பணிநியமன ஆணையினையும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலம் ஆதரவற்ற  மற்றும் பல்வேறு குடும்ப சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளுக்கு தலா ரூ.24,000/- வீதம் ரூ.2.88 லட்சம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வங்கி கணக்கு புத்தகம் என மொத்தம்  30 பயனாளிகளுக்கு ரூ.5,05,865/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.   
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (19.08.2019) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் , முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள்; மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்கனை பெற்றுக்கொண்டார். 
அதனைத்தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.17,865/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள முஸ்லீம் மகளிர்க்கு சுயதொழில் புரிவதற்கு முழு மானியத்துடன் கூடிய நிதியுதவி; வழங்கும் திட்டத்தின்கீழ் 10 மகளிர்க்கு தலா ரூ.10,000/- வீதம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினையும், வேளாண்மைத்துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் 2 விவசாயிகளுக்கு ஆழ்துளைக்கிணறு, பைப்லைன் அமைத்தல் மற்றும் மின்மோட்டார் நிறுவுவதற்கு பின்னேற்பு மானியம் தலா ரூ.50,000/- வீதம் ரூ.1 லட்சத்துக்கான உத்தரவு கடிதத்தினையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 2016-ஆம் ஆண்டு காலமான அங்கன்வாடி பணியாளர் திருவைகுண்டம் வட்டத்தை சேர்ந்த இ.பார்வதி என்பவரின் வாரிசுதாரர் இ.வினோதினி என்பவருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர் பணிநியமன ஆணையினையும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலம் ஆதரவற்ற  மற்றும் பல்வேறு குடும்ப சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளுக்கு தலா ரூ.24,000/- வீதம் ரூ.2.88 லட்சம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வங்கி கணக்கு புத்தகம் என மொத்தம்  30 பயனாளிகளுக்கு ரூ.5,05,865/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.  
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,, துணை ஆட்சியர் (பயிற்சி) சுப்புலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo