Onetamil News Logo

செவித்திறன் குறைபாடுள்ள பள்ளியில் குழந்தைகள் தின விழா 

Onetamil News
 

செவித்திறன் குறைபாடுள்ள பள்ளியில் குழந்தைகள் தின விழா   


தூத்துக்குடி 2019 நவம்பர் 14 ;தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி சாரண, சாரணிய இயக்க மாணவ, மாணவிகள் குழந்தைகள் தினவிழாவிற்காக பிரையண்ட் நகரில் உள்ள செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியினை பார்வையிட்டனர். 
குழந்தைகள் தின விழாவினை சக்தி வித்யாலயா சாரண, சாரணிய இயக்க மாணவ, மாணவிகள் பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம் தலைமையில் பிரையண்ட் நகரில் உள்ள நல்ஆயன் செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் அப்பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளும் ஆசிரியர்கள் கற்றுத் தரும் பாடத்தினை எப்படி கவனித்து பதிலளிக்கிறார்கள் அதன்படி எப்படி எழுதுகிறார்கள் என்பதை பார்வையிட்டனர். சக்தி வித்யாலயா சாரண, சாரணியர்கள் ஒன்றுகூடி பலவகையான கைத்தட்டல்களை செய்து காண்பித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தினர். அவர்களின் பேச்சுகளை நம்மால் கேட்க முடியாவிட்டாலும், அவர்களின் முகபாவனையில் சந்தோஷத்தைக் காணமுடிந்தது. நிறைவில் அவர்களுக்கு சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி சாரண, சாரணியர்கள் இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர். விழாவில் மாவட்ட சாரண, சாரணிய இயக்க பயிற்சி ஆணையரும் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வருமான ஜெயாசண்முகம், சாரண, சாரணிய பொறுப்பாசிரியர்கள் சுகந்தி, P.செல்வமாரி, ராஜ்பரத், பிரித்விராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நல்ஆயன் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo