Onetamil News Logo

தூத்துக்குடி அருகே பனை ஓலையில் முக கவசத்தை தயார் செய்து, பனை ஓலை மட்டை நாரால் இணைத்து, முகத்தில் அணிந்து கொண்ட தம்பதியினர் 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே பனை ஓலையில் முக கவசத்தை தயார் செய்து, பனை ஓலை மட்டை நாரால் இணைத்து, முகத்தில் அணிந்து கொண்ட தம்பதியினர்       


தூத்துக்குடி 2020 மார்ச் 31 ;சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவியதால் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரசால் இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பால், காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வீதம் குறிப்பிட்ட நேரத்தில் முக கவசம் அணிந்து வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் முக கவசத்தின் தேவை அதிகரித்து உள்ளது.முக கவசங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு முக கவசம் ரூ.30, 40, 50 என இஷ்டம் போல் விலையேற்றத்தை சந்தித்துள்ளன. இந்த விலை ெகாடுத்து முக கவசம் வாங்குவது என்பது ஏழைகளுக்கு சாத்தியம் இல்லாத நிலையில் ஒரு சிலர் கைக் குட்டை, டவல் ஆகியவற்றை முகத்தில் கட்டிச் செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் ஏழை கூலித் தொழிலாளர்கள் எங்கே போவது? எப்போதும் உடலில் சட்டை கூட இல்லாமல் பனையேறும் தொழிலாளர்கள் தங்களின் பனை ஓலையையே மாஸ்க் ஆக மாற்றி அணிந்து அசத்தியுள்ளனர்.
  இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் ஏராளமான பனையேறும் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது கோடை காலத்தில் பதனீர் சீசன் தொடங்கியதால், கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இதனால் ஒரு சில குடும்பத்தினரே முககவசம் அணிந்தவாறு, வெளியில் சென்று கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள், பனை ஓலையாலான முககவசத்தை தயார் செய்து, அதனை பனை ஓலை மட்டை நாரால் இணைத்து, முகத்தில் அணிந்து கொள்கின்றனர்.
 தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள கு.சுப்பிரமணியபுரத்தில் பனைத் தொழில் செய்துவருபவர்கள் குணசேகரன், முருகலட்சுமி தம்பதியினர். பனைத் தொழில் என்பது ஒரு ஆண்டில் 4 முதல் 6 மாதங்கள் வரை தான் இருக்கும். பனையில் பாலை வந்து அதை பக்குவப்படுத்தி இடுக்கி சீவி விட்டால் தான் பதநீர் இறக்கி கருப்பட்டி தயாரிக்க முடியும். அந்த பாலையை ஒரு நாள் சீவாமல் விட்டாலும் காய்ந்து விடும், பதநீர் இறக்க முடியாது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தொழிலையும் கை விட முடியாத இவர்கள் துணி மாஸ்க்கை தேடாமல் பனை ஓலையில் முகக்கவசம் தயாரித்து,அதை அணிந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo