Onetamil News Logo

ஸ்ரீசித்தர் பீடத்தில் செல்வ வளம் பெருகும் ஒரு லட்சத்து எட்டு எலுமிச்சைப்பழ மஹா வசீகர யாகம்..!

Onetamil News
 

ஸ்ரீசித்தர் பீடத்தில் செல்வ வளம் பெருகும் ஒரு லட்சத்து எட்டு எலுமிச்சைப்பழ மஹா வசீகர யாகம்..!


தூத்துக்குடி 2020 ஜனவரி  24 ;தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு எலுமிச்சை பழ மாபெரும் மஹா வசீகர யாகம் நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரேகல்லால் உருவான மிகப்பிரமாண்டமான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி -மஹாகாலபைரவர், சனீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் இன்று தை மாத ஸர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பக்தர்களின் வாழ்வில் கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், திருமணவரன், குழந்தைபாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், வாழ்வில் நினைத்தது யாவும் நினைத்தபடி இனிதே நடந்தேறிடவும் வேண்டி ''சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர்'' தலைமையில் சிறப்பு வசீகர மஹா யாக வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.
காலை 8மணிக்கு சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மதியம் 12மணிக்கு ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ சற்குருசீனிவாச சித்தர்'' தலைமையில் ஒரு லட்சத்து எட்டு(1,00,008) எலுமிச்சை பழங்கள் கொண்டு மஹா வசீகர யாகம் கோலாகலமாக நடைபெற்றது.
மதியம் 2மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், மஹா தீபாரதனையும் நடைபெற்றது.  தொடர்ந்து இரவு 7மணிக்கு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நிறைவுறுதலும், இரவு 8மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது.
மஹா யாக வழிபாடுகளை முன்னிட்டு காலை முதல் மாலை வரை ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மஹா யந்திர பாராயணமும், பக்தர்களுக்கு மஹா அன்னதானமும் நடைபெற்றது.
இதில், பிரபல திரைப்பட நடிகை கே.ஆர்.விஜயா தனது குடும்பத்தினருடன் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகளை செய்து வழிபட்டார். யாக வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு மஹா யாக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டு குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo