Onetamil News Logo

15 நாட்கள் மிக முக்கியமானது ;இந்த 15 நாட்கள்தான் கொரோனாவின் தமிழக தாக்கத்தை உறுதி செய்யும்

Onetamil News
 

15 நாட்கள் மிக முக்கியமானது ;இந்த 15 நாட்கள்தான் கொரோனாவின் தமிழக தாக்கத்தை உறுதி செய்யும்


தூத்துக்குடி 2020 மார்ச் 24 ;அடுத்த 15 நாட்கள் மிக முக்கியமானது. இந்த 15 நாட்கள்தான் கொரோனாவின் தமிழக தாக்கத்தை உறுதி செய்யும். 15 நாட்களுக்குள் கட்டுக்குள் வந்து விட்டால் பிரச்சனை இல்லை. கட்டுக்கடங்காமல் பரவினால் நிலைமை மோசமாகிவிடும். எனவே முடிந்தவரை இல்லை,அறவே வெளியே செல்லாதீர்கள்.  இது ஒரு தீவிர தொற்றுநோய். ஒருவருக்கு பாதித்தால் ஒரு குடும்பமே பாதிக்கப்படும். நம்மைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
நம் குடும்பத்தாரை பற்றி சிந்தித்து செயல்படவும். விடுமுறை விட்டதால் குழந்தைகளை வெளியில் அனுப்பி விளையாட வைப்பதை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும். வழக்கம்போலவே மொபைல்போன், தொலைக்காட்சிகளில் குழந்தைகளை குதுகலப்படுத்துங்கள்.. இப்போதைக்கு தவறில்லை,கடைகளை அடைக்கிறார்கள், மளிகை பொருட்கள் கிடைக்காது, காய்கறிகள் கிடைக்காது என்றெல்லாம் தேவையில்லாத கற்பனைகளை மனதில் வைத்துக்கொண்டு முண்டியடித்து மளிகை கடைகளுக்கும் மார்க்கெட்டுகளுக்கும் ஓடி அலைய வேண்டாம். அடுத்த இருபது முப்பது நாட்களுக்கு தேவையான பொருள்களை பொறுமையாக வாங்கி வைத்துக்கொண்டால் போதும். பொதுவாக குடும்பங்களில் மாத பட்ஜெட் முறையில் பொருட்கள் வாங்குவது வழக்கமானதுதான்.
எனவே அதே நடைமுறையில் பதட்டமில்லாமல் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளவும். வாங்க கூடிய பொருள்களும் ஆடம்பரம் தரக்கூடியதாக இல்லாமல் அன்றாட நம் உடம்புக்கு ஊக்கம் தரக்கூடியதாகவும் ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்கட்டும். குடிநீரை அனைவரும் சுட வைத்து குடிக்கவும். குடிநீரில் கொரோனா தொற்று வராது; அதே நேரத்தில் சுகாதாரம் இல்லாத குடிநீர் பருகுவதால் சளி காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு அது கொரோனாவாக இருக்குமோ என்கிற தேவையற்ற அச்சத்திலிருந்து விடுபட உதவும். இது வெயில் காலம் என்பதால், வெளியில் விளையாடச் செல்லும் குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் அதிக வியர்வை வரலாம். அதனால் சளி பிடித்து தலைவலி உள்ளிட்டவை வரலாம். அதையும் கொரோனா என நினைத்து அச்சப்படக்கூடாது.
இவற்றையெல்லாம் தவிர்க்க முழுமையான ஓய்வு நல்ல காற்றோட்டமான பகுதி தேவை. இதற்கு ஏசி தேவையில்லை நல்ல மின்விசிறி  வசதி இருந்தாலே போதும். ஊரில் இருந்து வெளியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை கை கால்களை சுந்நம் செய்த பின்பாக உள்ளே அனுமதிக்கவும். முடிந்தவரை அவர்கள் வருவதை தவிர்க்க கூறவும். நீங்களும் செல்ல வேண்டாம். மருந்து இல்லாத ஒரு நோயை தடுக்க முடியாது தவிர்க்க முடியும். அது அரசாங்கமும் அதிகாரிகளும் நினைத்தால் மட்டும் நடக்காது. ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தில்  விருப்பத்தில் அதை கடைபிடிக்க வேண்டும். நம்மிடம் வந்தால் நம் குடும்பத்தை தாக்கும் என்கிற சுயநலம் வேண்டும். பிறருக்கு பரவும் என்கிற பொதுநலம் அதற்கு பிறகு தான். பிறப்பைப் போலவே இறப்பும் பொதுவானது தான். ஆனால், அந்த இறப்பு அலட்சியத்தால் இருக்கக்கூடாது. நம்மை நாம் பாதுகாத்தால் பிறர் ஆரோக்கியமாக வாழ்வார்கள். நீங்கள் இல்லாமல் உங்கள் குடும்பம் மகிழ்வுடன் வாழும் என்றால்,விருப்பம் போல் சுற்றுங்கள்... இல்லையெனில்... அனைவரிடத்திலும் சற்று ஒதுங்கியே இருங்கள். ஒரு மாதத்திற்கு தான். நீங்களும் ஒரு பிக் பாஸ் போட்டியாளர் என நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை பிக் பாஸ் வீடாக மாற்றிக் கொள்ளுங்கள். ஓடவோ ஒளியவோ சொல்லவில்லை,ஒழித்துக் கட்டுவோம் என்று தான் சொல்கிறேன். பயம் பாதி கொல்லும்; திடம் நின்று வெல்லும். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo