Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்


தூத்துக்குடி 2019 ஜூன் 12 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினர் தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மரகதநாதன் தலைமையில் இன்று (12.06.2019) நடைபெற்றது. 
நிகழ்ச்சியில், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி, இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்த வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு, என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  
நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) இளங்கோ, வட்டாட்சியர் (தேர்தல்) நம்பிராயன், சைல்டுலைன் 1098 ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் திட்ட இயக்குநர் ஆதிநாராயணன், திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo