Onetamil News Logo

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்று தொடர்பாக  முறையிடலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்

Onetamil News
 

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்று தொடர்பாக  முறையிடலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்


தூத்துக்குடி 2020 மே 23 ;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்று தொடர்பாக  முறையிடலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கக் கோரி அரசாணை (நிலை) எண்.39 பிற்படுத்தப்பட்;டோர்இ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைஇ நாள்:21.04.2020-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை தலைவராக நியமித்து நான்கு உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி பொருள் தொடர்பாக குழுவிற்கு கோரிக்கைகள்/முறைகேடுகள் மற்றும்  ஆவணங்களை சமர்பிக்க விரும்பும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  26.05.2020-க்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது குழுவின் உறுப்பினரான செயலர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், எழிலகம் விரிவாக்க கட்டடம், 2ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5, அவர்களுக்கு எழுத்து பூர்வமாக தபால் அல்லது மின்னஞ்சல்;(dir-mbc@nic.in)    மூலமாக அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்இ மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தூத்துக்குடி தொலைபேசி எண்.0461-2340600-த்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo