Onetamil News Logo

அ.தி.மு.க.ஆட்சி 5 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் அரசு வழக்கறிஞர் வழங்கினார்.

Onetamil News
 

அ.தி.மு.க.ஆட்சி 5 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில்
கொரோனா நிவாரண பொருட்கள் அரசு வழக்கறிஞர் வழங்கினார்.


தூத்துக்குடி 2020 மே 25 ;அ.தி.மு.க.ஆட்சியின் 5 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் பை அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் வழங்கினார்.
 தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒபன்னீர்செல்வம் ஆகியோர் ஆணையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. எசயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.அறிவுரை படி அ.தி.மு.க. அரசு 5வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றம் மற்றும் தூத்துக்குடி நகர் அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம் இணைந்து சாலையோர , வீட்டு வேலை, மற்றும் ஒட்டல் தொழிலாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், தலைமை தாங்கினார்.தூத்துக்குடி நகர் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கல்வி குமார் முன்னிலை வகித்தார்.
 விழாவில் சாலையோர , வீட்டு வேலை, மற்றும் ஒட்டல் தொழிலாளிகளுக்கு அரிசி, வீட்டு உபயோக பொருட்கள் பையை தூத்துக்குடி அரசு வழக்கறிஞர் ேகாமதிமணிகண்டன் வழங்கினார்.

 இதில் முன்னாள் மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர், பி.சி.மணி எம்.ஜி.ஆர் மன்றம் நெப்போலியன், கோபால், வீரபாண்டியன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தொப்பை கணபதி, பொன்னம்பலம், செல்வராஜ், மாரியப்பன், தெர்மல் தொழிற்சங்கம் இணை செயலாளர் ஜவஹர், மற்றும் முன்னாள் பிள்ளையார் கோவில் தக்கார் முருகன், நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் சகாயராஜ், மாவட்ட தகவல் பிரிவு இனண செயலாளர் சோபன், ஆறுமுகம், சங்கர், கருங்குளம் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சேர்ந் தையன், பரமசிவம், கணேசன், சரவணன் உலகு, மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo