Onetamil News Logo

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாராத்தான் ஓட்டம் ;கலெக்டர்,எஸ்பி ஓடினார்கள். தூத்துக்குடி 2019 ஏப்ரல் 13 ;

Onetamil News
 

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாராத்தான் ஓட்டம் ;கலெக்டர்,எஸ்பி ஓடினார்கள். 


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 13 ;தூத்துக்குடியில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாராத்தானை
மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்து கலந்து கொண்டார்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாராத்தான் இன்று(13.04.2019) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும்,விழிப்புணர்வுமினிமாராத்தானில் மாவட்டஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர் அவர்கள் கலந்துகொண்டார்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் மூலம் தொடர்ந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அவ்வகையில் இன்று தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற மினி மாராத்தானில் சுமார் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விழிப்புணர்வு மினிமாராத்தான் முத்துநகர் கடற்கரையில் துவங்கி தூத்துக்குடி மில்லர்புரம் பேருந்து நிருத்தம் வரை சென்றடைந்தது.
    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, ., தூத்துக்குடிசார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,.,உதவிஆட்சியர் பயிற்சி மரு.அணு, .,சுகாதாரபணிகள் துணை இயக்குநர் மரு.கீதாராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ்,மாவட்டஆட்சித் தலைவர் அவர்களின் துணைவியார் அத்யாஷா நந்தூரி மற்றும் அலுவலர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo