Onetamil News Logo

இலவசமாக வழங்குவதில் ஊழல் ;கால்நடை துறையில் மாபெரும் முறைகேடுகள் ;பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பசுமாடுகள் ஆடுகள் ;தமிழ் விவசாயிகள் சங்கம் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தகவல்

Onetamil News
 

இலவசமாக வழங்குவதில் ஊழல் ;கால்நடை துறையில் மாபெரும் முறைகேடுகள் ;பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பசுமாடுகள் ஆடுகள் ;தமிழ் விவசாயிகள் சங்கம் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தகவல்


தூத்துக்குடி  2020 ஆகஸ்ட் 9 ;தூத்துக்குடி மாவட்டம் கால்நடை துறையில் மாபெரும் முறைகேடுகள் நடந்து வருகிறது. 
தமிழ் விவசாயிகள் சங்கம் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... பசுமாடுகள் ஆடுகள் இலவசமாக வழங்குவதில் தகுதியின் அடிப்படையில் இல்லாமல் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கி மாபெரும் ஊழல் நடந்துள்ளது சென்ற ஆண்டிலிருந்து இந்த வேலை நடந்து வருகிறது 
ஏற்கனவே தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பலமுறை சென்றாண்டு வலியுறுத்தப்பட்டது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
அந்தந்த கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க் மூலம் பயனாளிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள் இந்த பட்டியலை உளவுத்துறை விசாரித்தால் பல கோடிக்கு உண்மைகள் வெளியே வரும், 
இவரர்களுக்கு உடந்தையாக இருப்பது தூத்துக்குடி மாவட்ட கால்நடை துறை இயக்குனர் அவர்கள் தான் இவர்கள் கொடுக்கும் ஆலோசனையின் பேரில்தான் பயணிகளை தேர்ந்தெடுக்கிறார்கள் பயனாளிகளிடம் ஒரு பகுதி வசூலிக்கப்படுகிறது இலவசமாக தானே மாடுகளை தருகிறோம் ஆடுகளை தருகிறோம் ஒவ்வொருவருக்கும் ஒருதொகை கொடுங்கள் என்று வசூலிக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பசுமாடுகள் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. 2017 /18/19 இந்த ஆண்டுகளில் தான் அதிகமான முறைகேடுகள் கால்நடை துறையில் நடந்துள்ளது தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறை இதை உடனடியாக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் உண்மையின் வெளிச்சம். 
நமது நாடு நலம் பெற வேண்டும் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி கால்நடைத் துறையில் நடக்கும் இந்த ஓலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும் நமது உளவுத்துறை  மீது நம்பிக்கை வைக்கிறோம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo