இரா.சுதாகர் தலைவராக பதவியேற்றார் ;தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் நடந்தது.
தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 19 ;தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் இன்று (19.08.2019) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, , சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் அவர்கள் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 19 பேர் என மொத்தம் 21 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பேற்ற சுதாகர், துணைத்தலைவர் கணேச பாண்டியன் ஆகியோரை வாழ்த்தினார்.
விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:
கூட்டுறவு துறையில் தேர்தலை நடத்தி மிகப்பெரிய சாதனைகளை படைத்தார்கள். அம்மா நல்லாசியுடன் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3 மாதங்களுக்கு முன்பாக ஜனநாயக முறையின்படி கூட்டுறவு தேர்தல்களை நடத்தி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நல்ல வாய்ப்பினை வழங்கினார்கள். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்து படிப்படியாக அனைத்து நிலையான கூட்டுறவு சங்கங்கங்களில் தேர்தல் முறையாக நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்;படி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் இயங்கும் பன்னை பசுமை காய்கறி அங்காடி விற்பனையில் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து தமிழகத்தில் சிறந்த வங்கி என பெயர் பெற வேண்டும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து அடுத்த ஆண்டில் விருது பெறும் வகையில் கூட்டுறவு வங்கி செயல்பட வேண்டும். இதற்கு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,:-"தமிழகத்திலேயே விவசாயிகளுக்கு அதிக பயிர்க்கடன் வழங்குவதில் முதன்மையாக உள்ள கூட்டுறவு வங்கியாக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம், தொடர்ந்து அரசு மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மற்றும் பயிர்க்கஞன், விவசாயக்கடன் உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்பாக செயல்படுவதற்கு அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள்" என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் / தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் (பொ) இந்துமதி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அருள்சேசு, தேர்தல் அலுவலர் சந்திரா, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அந்தோணிபட்டுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், அய்யாத்துரைபாண்டியன், ராமச்சந்திரன், வினோபாஜி, சேசுதுரை, நடராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.