Onetamil News Logo

தினமும்  20 நிமிடங்கள் சிரிப்புடன் கைகளைத் தட்டுங்கள் ; இதயம் , கல்லீரல்,வாதம்,பித்தம் குணமாகும் 

Onetamil News
 

தினமும்  20 நிமிடங்கள் சிரிப்புடன் கைகளைத் தட்டுங்கள் ; இதயம் , கல்லீரல்,வாதம்,பித்தம் குணமாகும் பொதுவாக, அடுத்தவர்களின் நற் செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம்.சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.
கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.
கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம். கை தட்டுவதும் ஒரு விதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களை கட்டுப்படுத்த முடியும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.
அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.
தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும். இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்து விடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்..

கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர்.

எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெற்றி தான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.

கை தட்டுவதே ஒரு சிகிச்சை தான். கை தட்டும் போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள்.

மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.

சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கை முறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும்.

99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo