Onetamil News Logo

நவீன வசதிகளுடன் அங்கன்வாடி ;தூத்துக்குடி மாநகராட்சி புது முயற்சி

Onetamil News
 

நவீன வசதிகளுடன் அங்கன்வாடி ;தூத்துக்குடி மாநகராட்சி புது முயற்சி 


தூத்துக்குடி 2018 ஆகஸ்ட் 9;தூத்துக்குடி  மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள 22 அங்கன்வாடி மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, இருக்கை வசதிகள், குழந்தைகளின் வருகையினை உறுதி செய்வதற்கான பயோமெட்ரிக் வசதி, எல்.இ.டி. டி.வி.,  புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.                          
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர்  டாக்டர். ஆல்பி  ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...
தூத்துக்குடி மாநகரப்பகுதிகளில் அழகேசபுரம், வடக்கு பத்திரகாளியம்மன்கோவில் தெரு, சாமுவேல்புரம், செல்வநாயகபுரம், கே.வி.கே.நகர், ரகுமத்துல்லாபுரம், சாரங்கபாணிதெரு, சத்திரம்தெரு, டூவிபுரம், வி.வி.டி.பூங்கா, மங்களபுரம், சுப்பையா பூங்கா, திரேஸ்புரம் மற்றும் வரதராஜபுரம் ஆகிய  இடங்களில் அமைந்துள்ள 22 அங்கன்வாடி மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, இருக்கை வசதிகள், குழந்தைகளின் வருகையினை உறுதி செய்வதற்கான பயோமெட்ரிக் வசதி, எல்.இ.டி. டி.வி., குழந்தைகளின் மனதைக் கவரும் வகையிலான வண்ணமிகு ஒவியங்கள், பசுமை நிறைந்த காற்றோட்டமான அறைகள் மற்றும் கழிப்பிட வசதிகள் என அனைத்து அம்சங்களுடன் கூடிய நவீனமயமான அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மீதமுள்ள அங்கன்வாடிகளும் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமெனவும்  தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo