Onetamil News Logo

தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ்-க்கு பாராட்டு ;மே 22 அன்று இதுபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்துப் பேசி சாதுரியமான நடவடிக்கை செய்திருந்தால் துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்று பொதுமக்கள் பலர் கருத்து 

Onetamil News
 

தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ்-க்கு பாராட்டு ;மே 22 அன்று இதுபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்துப் பேசி சாதுரியமான நடவடிக்கை செய்திருந்தால் துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்று பொதுமக்கள் பலர் கருத்து 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 15 ;சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA,NRC,NPR ஐ கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்பு சுமார் 1000 பேர் கலந்து கொண்ட முற்றுகை போராட்டம் இன்று நடந்தது. 
முதலில் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தை முற்றுகை செய்வதாகக் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.  ஆனால் டிஎஸ்பி பிரகாஷ்- போராட்டக்காரர்களுடன் சமயோஜிதமாக பேசி முதலில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகை இடுவதாக இருந்தது அதனை தனது சாதுரியமான நடவடிக்கையால் அவர்களை தென்பாகம் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார். இதனால் டிஎஸ்பி க்கு பாராட்டுகள் குவிந்தன.
மே 22 அன்று இதுபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்துப் பேசி சாதுரியமான நடவடிக்கை செய்திருந்தால் துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்று பொதுமக்கள் பலர் தெரிவித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo