Onetamil News Logo

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் ;வருமுன் மக்களை பாதுகாக்க வேண்டி விழிப்புணர்வு பயணம் தொடக்கம் 

Onetamil News
 

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் ;வருமுன் மக்களை பாதுகாக்க வேண்டி விழிப்புணர்வு பயணம் தொடக்கம் 


தூத்துக்குடி 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை ; மதர்சமூகசேவை நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ்வரும்முன் மக்களை பாதுகாக்கவேண்டிவிழிபுணர்வு பயணம் தொடங்கப்பட்டது.
   மதர் சமூக சேவை நிறுவனம் மதர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயனம் தொடக்கவிழா ஆத்தூரில்  நடைபெற்றது.விழாவிற்கு மதர் குழுக்கள் கூட்டமைப்பு தலைவி தெய்வநாயகி வரவேற்றார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ். பானுமதி சமூக ஆர்வலர் சிவ சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக  மதர் சமூக சேவை நிறுவன இயக்கனர் எஸ்.ஜே.கென்னடி கலந்து கொண்டு  துண்டு பிரசாரம் வழங்கி பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்து பேசியனார்  இதில் கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளிஇ இருமல்இ காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும். சீனாவில் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோயி; தொற்று ஏற்பட்டுள்ளது. இது விலங்குகளியிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம். என கூறப்படுகிறது. 
இந்த கொரோனா வைரஸ் நோய்யை கட்டுபடுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் பொறுப்புணர்வும் மிகவும் இன்றியமயதாக தேவைப்படுகிறது. மக்கள் தங்களின் கைகளை தினமும் குறைந்தது 10 முதல்15 முறை சோப் போட்டு கழுவவேண்டும். தரைகளை மட்டும்மல்லாமல் அனைத்து தளங்களையும் சுத்தம் செய்யவேண்டும். அவசியமற்ற பயணங்களை தவிர்க்கவேண்டும். வீடுகளில் மக்களை முடக்க செய்ய வேண்டும். அனைத்து குடியிருப்புகளிலும் 24 மணிநேரமும் மூடப்பட்ட மேலாண்மை முறையை செயல்படுத்த வேண்டும். தனியார் கார்களுக்கு தடைசெய்ய வேண்டும். மளிகை சாமான்கள் மற்றும் மருந்துக்கள் வீடுகளுக்கு அனுப்பபடவேண்டும்.பொது இடங்கள் கூட்டங்களுக்கு தடைசெய்யவேண்டும்.
கோவில்இ மசூதி ஆலயங்களில் கூட்டமாக வருவதை தவிர்க்கவேண்டும். பள்ளிகள் மூடப்பட்டுஇ வண்டிகள்இ பேருந்துகள் மற்றும் பொது இடங்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். நோய்யின் அறிகுறிகளை கண்டறிதல் நாள் 1 முதல் 3 நாட்கள் காய்ச்சல் மற்றும் மெலிதான தொண்டையுடன் 4வது நாள் குரல்கரகரப்பு உடலுக்கு வெப்பம் அதிகரித்தல் பசியின்மை தலைவலி வயிற்றுப்போக்கு 5வது நாள் உடல்;சோர்வு தசைகளில் வலி வறண்ட இருமல் மெலிதான காய்ச்சல் கோழையுடளான இருமல் வறட்டுஇருமல்இ மூச்சு திணறல்இ வயிற்றுபோக்கு அல்லது வாந்தி ஆகியவை நோயின் அறிகுறிகளாக காணப்படுகிறது. கை கழுவும் திரவகத்தை கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.மூக்கு மற்றும் வாயை முழங்கையை மடக்கி அல்லது டிசு  காகிதம் மூலம் மறைக்க வேண்டும். கண்கள் மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிர்க்கவேண்டும்.
பொதுஇடங்களில் எச்சில்துப்பக்கூடாது. இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால் பிறரை நெருங்குவதைஇ பயனம் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு காய்ச்சல்இ இருமல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டால் அரசுமருத்துவமணை உதவியை விரைவாக நாட வேண்டும். பயணங்களை பற்றிய விபரங்களை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். பயணங்களின் போது நோய் வாய்ப்பட்டால் ஊழியர்களிடம் தெரிவித்து மருத்துவ உதவியை விரைவில் முயல வேண்டும். நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் உண்ண வேண்டும். நோய்வாய்பட்டுள்ள மிருகங்களை தொடுவது அவற்றடன் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.முகமூடிகள் உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு தேவையில்லை. சிறிய அளவில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் கொண்டவர்;. காற்று மாசு பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட எண்95 முகமூடியை கோவிட்-19 நோய் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தலாம்.;.
நோய்யாளிகளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மூன்று அடுக்கு முகமூடியை பயன்படுத்தலாம். தனிநபர் தங்களை பாதுகாத்து கொள்ள உங்கள் நன்மைக்காக எடுக்க வேண்டிதொடர் நடவடிக்கைகள் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கூடாது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கூட்டத்திலும் கலந்து கொள்ள கூடாது. திரையரங்குகளுக்கோஇ உணவுவகத்திற்கோஇ செல்ல கூடாது உடற்பயிற்சி கூட்டங்களுக்கோஇ நீச்சல் குளத்திற்கோஇ செல்ல கூடாது. நீங்கள் மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லும் பொது இரு கைகளை கூப்பி வணங்கி வாழ்த்து சொல்ல வேண்டும். தங்கள் முகத்தை தொடுவதற்கு முன் கைகள் நன்கு கழுவ வேண்டும். பொது சுகாதார துறை அறியுறுத்தலின் படி ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறை 20 நொடிகளுக்கு கைகளை கழுவ  வேண்டும். பொது இடங்களில் கைபடும் இடங்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்கு அவசியம் இல்லாத காரணங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொது மக்கள் நலமுடன் இருக்க தன் சுத்தம் போன்ற முறையை கையாள வேண்டும். என்பதில் உறுதியாகஇருக்கவேண்டும். என இயக்கனர் கென்னடி கூறினார்.
மிக கொடிய வைரஸ் ஆன கொரோனா வைரஸ்யை தடுப்பதற்காக விழிப்புணர்வு பிரசாரம் ஆத்தூரிலிருந்து தொடங்கியது. இந்த பிரச்சாரம் மாவட்ட முழுவதும் தொடர்ந்து  நடைபெறும்.இந்த பிரச்சாரத்தை கலந்து கொள்ளும் தன்னார்வ தொண்டர்கள் தனிதனியாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்இ ஸ்டிக்கர்கள் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இதில் 100 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு பிரச்சுரம் செய்தார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக செவை நிறுவனத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo