தூத்துக்குடியில் பசுபதி பாண்டியன் 9வது நினைவு தினம் ;தேவேந்திரகுல இளைஞர் கூட்டமைப்பு சார்பாக நிறுவனத் தலைவர் பிரதீப் பாண்டியன் தலைமையில் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி 2021 ஜனவரி 10 ;தேவேந்திரகுல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 10-1-2012 --ல் திண்டுக்கலில் நந்தனம் பட்டியில் கொலைசெய்யப்பட்டார்.
இதனால் தேவேந்திர குல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது சமாதி தூத்துக்குடி மேல அலங்காரத் தட்டு பகுதியில் உள்ளது. இங்கு வருடந்தோறும் அவரது நினைவு நாளில் குரு பூஜை,அன்ன தானம் பிரமாண்டமாக நடைபெறும். இதில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் உள்ள பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் 144 - சட்டம் அமுலில் தமிழக முழுவதும் உள்ளதால் இங்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வருவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இன்று நினைவு நாளை முன்னிட்டு மறைந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் இளைஞர்கள் ஏராளமானோர் நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ் தேசிய முதன்மை போராளி மாவீரன் பசுபதி பாண்டியன் சமாதிக்கு தேவேந்திரகுல இளைஞர் கூட்டமைப்பு சார்பாக நிறுவனத் தலைவர் பிரதீப் பாண்டியன் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் இசக்கி பாண்டியன்,ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மனோஜ் பாண்டியன்,தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் மாமல்லர் நந்து தூத்துக்குடி வழக்கறிஞர் பிரிவு ராம்குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு மகாராஜன் மற்றும் தேவேந்திர குல இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.