Onetamil News Logo

தூத்துக்குடியில் இயங்கி வரும் 74 குழந்தைகள் இல்லங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டுதல் 

Onetamil News
 

தூத்துக்குடியில் இயங்கி வரும் 74 குழந்தைகள் இல்லங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டுதல்  



தூத்துக்குடி2019 ஜூன் 12 ; தூத்துக்குடியில் இயங்கி வரும் 74 குழந்தைகள் இல்லங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தரங்கள் பின்பற்றப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது ....தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் நீதிச் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015-ன் கீழ் 87 குழந்தைகள் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 குழந்தைகள் இல்லங்கள் அரசின்  கட்டுப்பாட்டின் கீழும் 1 குழந்தைகள் இல்லம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழும் இயங்கி வருகின்றன. 9 குழந்தைகள் இல்லங்கள் சமூகப்பாதுகாப்புத்துறையின் மானியம் பெற்றும் 62 குழந்தைகள் இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வருகின்றன. 13 குழந்தைகள் இல்லங்கள் 2018-2019 கல்வியாண்டில் இயங்கவில்லை. தூத்துக்குடியில் தற்போது இயங்கி வரும் 74 குழந்தைகள் இல்லங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தரங்கள் பின்பற்றப்பட வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் உடனடியாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். பெண் குழந்தைகள் மட்டும் தங்கி பயிலும் குழந்தைகள் இல்லங்களில் நிர்வாகி  மற்றும் பணியாளர்கள் பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். ஒரு வார காலத்திற்குள் குழந்தைகள் இல்லங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் காவல்துறை தடையின்மை சான்று பெறப்படவேண்டும் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo