Onetamil News Logo

தேங்கியுள்ள கழிவு மற்றும் மழை நீரால் நோய்த் தொற்று பரவும் அவலம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.இது சம்பந்தமாக காஸ்ட்ரோ மாநகர தலைவர் ஜேம்ஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கை

Onetamil News
 

தேங்கியுள்ள கழிவு மற்றும் மழை நீரால் நோய்த் தொற்று பரவும் அவலம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.இது சம்பந்தமாக காஸ்ட்ரோ மாநகர தலைவர் ஜேம்ஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கை


தூத்துக்குடி 2020 நவம்பர் 22 ; தேங்கியுள்ள கழிவு மற்றும் மழை நீரால் நோய்த் தொற்று பரவும் அவலம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.இது சம்பந்தமாக காஸ்ட்ரோ மாநகர தலைவர் ஜேம்ஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது....
♻ தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் போதிய மழைநீர் வடிகால் வசதி மற்றும் கழிவுநீரோடை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லா காரணங்களால் சமீபத்தில் பெய்த கனமழையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் மழைநீரால் தேக்கநிலை ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர் 3வது தெரு கிழக்குப் பகுதி குடியிருப்புகளை  சுற்றியுள்ள இடங்களில்  மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் முழுவதும் கழிவுநீரால் சூழ்ந்துள்ளது. இதனால் பிரையண்ட் நகர் பகுதிகளை சுற்றிலும் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் நிலை உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும்  மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர் 3வது தெரு கிழக்குப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளவதோடு,  நோய்த் தொற்று பரவுவதை தடுக்க வேன்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo