Onetamil News Logo

புதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொலை 

Onetamil News
 

புதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொலை 


தூத்துக்குடி 2019 செப் 16 ;புதுக்கோட்டை அருகே நள்ளிரவு நண்பர்களுடன் குடி போதையில் தகராறு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள மேல கூட்டுரங்காட்டை சேர்ந்த மேல கூட்டுடன் காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் சொரிமுத்து (36) என்பவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள லாரி செட்டில் கல்யாணசுந்தரம் மகன் சொரிமுத்து (36) டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அங்கு ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வள்ளிநாயகம் (36) என்பவர் கிளீனராக உள்ளார். நேற்று இரவு இருவரும் வேலை முடிந்து ஒரே பைக்கில் ராமச்சந்திரபுரம் சென்றுள்ளனர். 
ராமச்சந்திரபுரம் வீட்டுத் திண்ணையில் வைத்து  திருவிக நகரைச் சேர்ந்த காளியப்பன், பீட்டர் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாகக் அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். இதில் ஆத்திரம் அடைந்து  பீட்டர் காளியப்பன் ஆகிய இருவரும் சேர்ந்து சொரிமுத்துவை வெட்டிக்கொலை செய்ததாக கூறுகின்றனர். இதுகுறித்து  புதுக்கோட்டை போலீஸ்க்கு ஊர்மக்கள்  தகவல் கொடுத்ததை அடுத்து  காவல் ஆய்வாளர் திருமலை  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 
கொலை நடந்த  இடத்தை தூத்துக்குடி  மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து வள்ளிநாயகம் என்பவரிடம்  போலீசார் துருவி துருவி விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo