Onetamil News Logo

முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஒட்டிகளுக்கு தூத்துக்குடியில் 100ரூபாய் அபராதம் 

Onetamil News
 

முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஒட்டிகளுக்கு தூத்துக்குடியில் 100ரூபாய் அபராதம் 


தூத்துக்குடி 2020 மே 29  ;தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட் கள் வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வெளியில் சென்று வருகின்றனர்.  வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி முக கவசம் அணியாமல் சென்றால் ரூ .100 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் வி.இ ரோடு,தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் 33 வயது நபருக்கு கொரனா தொற்று உறுதியானதால் அந்த பகுதி முழுவதும் ,அடைப்பு செய்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் தலைமையில் கிருமிநாசினி  தெளிக்கப்பட்டது. கிழக்கு பகுதி உதவி ஆணையர் தனசிங்  தரக்கட்டுபாடு உதவி ஆணையர்  பிரின்ஸ், சுகாதார அதிகாரி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தூத்துக்குடியில் கத்தோலிக்க சாமியாருக்கு மே 23 ம் தேதி தொற்று ஏற்பட்டது.அதன் பின்னர் 4 நாட்கள் கழித்து தூத்துக்டுயில் மீண்டும் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இதனால் அவருடன் பழகியவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி இன்று முதல் முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஒட்டிகளுக்கு 100ரூபாய் அபராதம்  விதிக்கப்பட்டது. கொரானா பரவாமல் இருக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து , தனித்து இருப்போம் வீட்டில் ,
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo