Onetamil News Logo

தூத்துக்குடி ராஜ் தியேட்டரில் இன்று முதல் பரியேறும் பெருமாள் ;தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் சிறப்புப் பேட்டி 

Onetamil News
 

தூத்துக்குடி ராஜ் தியேட்டரில் இன்று முதல் பரியேறும் பெருமாள் ;தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் சிறப்புப் பேட்டி 


தூத்துக்குடி 2018 செப் 28 ; தூத்துக்குடி ராஜ் தியேட்டரில்  பரியேறும் பெருமாள்  இன்று முதல் வெள்ளித்திரையில் தெரிகிறது. 
                                                                                                                                           இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப் செய்தியாளர்களிடம் கூறுகையில் தெரிவித்ததாவது... இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.ஸ்ரீவைகுண்டம் பகுதியை சார்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - ஆனந்தி ஜோடியாக நடிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ உளவியல் அரசியல் பற்றி பேச வருகிறது.கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்; ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
ராமின் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் முதல் படம் இது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியையும், கிராமங்களையும் மையமாக கொண்ட கதைக்களம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு மாணவன், சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அங்கு உள்ள ஒரு உயர் சமூக மாணவியுடன் ஏற்படும் நட்பால், இவர் சந்திக்கும் பிரச்னைகளும், சவால்களும் என்னவென்பது தான் படத்தின் கதையாகும்.  பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க அவருடன் கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையே பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர். கிராமங்களில் இன்று கூட உள்ள ஏற்றத்தாழ்வுகள், அதனால், பள்ளி, கல்லூரி என மாணவ மாணவிகள் தினம் சந்திக்கும் கஷ்டங்களையும் அவமானங்களையும் நம் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர். கல்லூரி கலாட்டா, காமெடி என துவங்கும் படம், கொஞ்சம் கொஞ்சமாக சீரியஸாக மாறுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கே.செல்வா எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சான்டி நடனம் அமைக்க, சண்டைப்பயிற்சியை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். நிர்வாகத் தயாரிப்பு லிஜீஷ். படப்பிடிப்பு முடிந்து இன்று வெள்ளித் திரைக்கு வந்துள்ளது.
படத்தின் கதாநாயகன் கதிரின் சினிமா வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமையும்”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்”தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்". இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார்.
                                     
இன்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையில் ஓடுகிறது.  நீலம் பண்பாட்டு மையத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரதீப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சதீஸ், பொருளாளர் முகேஷ் ஆகியோர் ரசிகர்களுக்கு 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo