Onetamil News Logo

டாஸ்மாக் திறப்பு ;குடிகாரர்களின் வெறியாட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில்  கொலை, கொள்ளை சம்பவங்கள் பெருகுவதால் போலீஸ் கலக்கம் 

Onetamil News
 

டாஸ்மாக் திறப்பு ;குடிகாரர்களின் வெறியாட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில்  கொலை, கொள்ளை சம்பவங்கள் பெருகுவதால் போலீஸ் கலக்கம் 


தூத்துக்குடி 2020 மே 20 ; டாஸ்மாக் திறப்பு ;குடிகாரர்களின் வெறியாட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில்  கொலை, கொள்ளை சம்பவங்கள் பெருகுவதால் போலீஸ் கலக்கம் அடைந்துள்ளனர்.
மதுகுடிப்பதனால் கொலைகள்,  மற்றும் சட்டவிரோத செயல்கள் போன்றவை மீண்டும்  தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேற தொடங்கி உள்ளது. 
 டாஸ்மாக் மூடிய காலங்களில் எந்த குற்ற செயல்களும் நிகழவில்லை, போலீஸ் நிம்மதியாக இருந்தனர்.மதுகுடித்த குடிகாரர்களை ஆஸ்பத்திக்கு கொண்டு போய் ,செக் பண்ணி அவர்களுக்கு அபராதம் போடுவது,இதனால் ஆஸ்பத்திரியிலும் கூட்டம் அலைமோதுகிறது.
 மதுக்கடைகள் திறந்தவுடன் பலகோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடக்கிறது.தூத்துக்குடியில் தற்போது  தொடர்ச்சியாக எண்ணிலடங்கா குற்றச்சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.
உதாரணத்திற்கு கடந்த மே மாதம் 17ந் தேதி மற்றும் மே 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குற்றச்சம்பவங்கள்:-
● தொழிலாளர்கள்  வசிக்கும் பகுதிகளில் தினந்தோறும் வாலிபர்களுக்குள் முட்டி,மோதல்,சமரசம் 
● முக்காணி அருகே வாலிபர் குத்திக்கொலை.
● ஏரல் அருகே வீடு புகுந்து நகை திருட்டு.
● ஆறுமுகநேரி அருகே வாலிபருக்கு கத்திக் குத்து.
● குளத்தூர் அருகே சிறுமி பாலியல்  சீண்டல் ,தீக்குளிப்பு 
● பசுவந்தனை அருகே தந்தை,மகன் வெட்டிக்கொலை.
● மெஞ்ஞானபுரம் அருகே டாஸ்மாக் காவலாளிக்கு கத்திக்குத்து.
● தூத்துக்குடியில் வாலிபருக்கு வாள் வெட்டு.
● சாத்தான்குளம் அருகே ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் வெட்டிக்கொலை.
● தொழிலாளர்களின் குடும்பங்களில் தினந்தோறும் நிகழும் குடும்ப வன்முறை சம்பவங்கள் 
தூத்துக்குடி மாவட்டத்தின் நிகழ்ந்த  குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்த போது முழுக்க ,முழுக்க மதுகுடிப்பதனால் தான் அணைத்து குற்ற செயல்களும் நடந்து வருகின்றது.என்பது உண்மையாகத் தெரியவருகின்றது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo