Onetamil News Logo

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி “ ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ” வாழ்த்துச் செய்தி   

Onetamil News
 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி “ ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ” வாழ்த்துச் செய்தி     


சென்னை ,2019 அக்டோபர் 6 ; தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிசாமி “ ஆயுத பூஜை ” மற்றும் “ விஜயதசமி ” வாழ்த்துச் செய்தி  வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையும் , பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் . 
நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களில் , முதல் மூன்று நாட்கள் துணிவைத் தரும் மலைமகளையும் , அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வாரி வழங்கும் திருமகளையும் , இறுதி மூன்று நாட்கள் அழிவில்லா செல்வமான கல்விச் செல்வத்தை அருளும் கலைமகளையும் , மக்கள் போற்றி வணங்குவது நவராத்திரி பண்டிகையின் சிறப்பாகும் .
 உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் , மக்கள் தங்களது தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழில் கருவிகளை இறைபொருட்களாக பாவித்து , தொழில் வளம் பெருகி , வாழ்வு வளம்பெற வேண்டும் என்று அப்பொருட்களுக்கு பூஜை செய்து வழிபடும் திருநாளே “ ஆயுத பூஜை ” நன்னாளாகும் . வெற்றி திருநாளாம் விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் , மக்கள் இறைவனை வணங்கி , கல்வி , கலை , தொழில் போன்றவற்றை தொடங்கி விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள் . இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் , அனைத்து நலன்களையும் , வளங்களையும் பெற்று , சீரோடும் சிறப்போடும் மனமகிழ்வுடன் வாழ்ந்திட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் .இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் K . பழனிசாமி கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo