Onetamil News Logo

உலக அளவிலான திறன் ஆய்வு போட்டி;ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 

Onetamil News
 

உலக அளவிலான திறன் ஆய்வு போட்டி;ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 


தூத்துக்குடி, 2020 ஜன. 13; 2021ம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் உலக அளவிலான திறன் ஆய்வு போட்டிக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பாக, மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகள் ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;2021ம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் உலக அளவிலான திறன் ஆய்வு போட்டிக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பாக, மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகள் ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்கு முன்னதாக, ஜனவரி 20 முதல் 22 வரை (விண்ணப்பங்கள் அதிகமுள்ள ஒரு சில திறன் பிரிவுக்கு மட்டும்) முதற்கட்ட தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேற்கண்ட விவரங்கள், போட்டிக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அழைப்பு கடிதம், மின் அஞ்சல், வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தனியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் மின் அஞ்சல் செய்திகளின்படி முதற்கட்ட தேர்வு நடைபெறும் நாளன்று காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்தில் ஆஜராகி தங்களது வயது தகுதியை உறுதி செய்யும் பொருட்டு ஆதார் அல்லது பிற கல்வி சான்றிதழ்களை தேர்வு மையத்தில் சமர்ப்பித்து, தேர்வு கூட நுழைவு சீட்டுகளை பெற்று, முதற்கட்ட திறனாய்வு போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காணும் முதற்கட்ட திறனாய்வு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே ஜனவரி 23 முதல் 31 வரை நடக்கும் மாவட்ட திறனாய்வு போட்டியில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் என்பதால் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெறும் போட்டியில் தவறாது கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அழைப்பு கடிதம், மின் அஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி செய்தி பெறப்படாத விண்ணப்பதாரர்கள், அரசு தொழிற் பயிற்சி நிலையம், தூத்துக்குடி வளாகத்திலுள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தூத்துக்குடி அவர்களை நேரிலோ அல்லது கீழ்காணும் தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தேர்வு மைய விபரத்தை தெரிந்து கொண்டு நேரடியாக தேர்வு மையத்திற்கு வருகை தந்து திறனாய்வு போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொலைபேசி எண்கள்: 0461-2340041 ;9487253178 மற்றும் 8778333588
மேற்கண்ட தகவல்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவிப்பதுடன் போட்டியாளர்கள் வெற்றிபெற  வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo