Onetamil News Logo

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தூத்துக்குடி  மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை ஞானசேகரன், தலைமையில்  ஆலோசனைக்கூட்டம்

Onetamil News
 

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தூத்துக்குடி  மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை ஞானசேகரன், தலைமையில்  ஆலோசனைக்கூட்டம்


தூத்துக்குடி 2020 பிப்.13: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தூத்துக்குடி  மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை ஞானசேகரன், தலைமையில்  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
       தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தூத்துக்குடி  மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை ஞானசேகரன், தலைமையில்  ஆலோசனைக்கூட்டம் இன்று (13.02.2020) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை ஞானசேகரன், தெரிவித்ததாவது:-
       இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 தொடர்பான பணிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர்கள் பதிவு அலுவலர்களும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்;டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் நாளை நடைபெறுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்,கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன்,  தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்பிரியா, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் வட்டாட்சியர் நம்பிராஜன், வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo