Onetamil News Logo

நான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின்படி எந்த பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

Onetamil News
 

நான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின்படி எந்த பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை.


தூத்துக்குடி 2020 ஜனவரி 20 ;  நான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின்படி எந்த பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை மாவட்ட மதிமுக சார்பில் தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஆட்சியரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது....தூத்துக்குடி துறைமுகம் - மதுரை (பைபாஸ்) நான்கு வழிச்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மற்றும் பல ஆயிரம் சிறுரக வாகனங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன. இந்த சாலையில் வாகனங்கள் சென்று வருவதற்கு புதூர் பாண்டியாபுரம் அருகில் சுங்கச்சாவடி அமைத்து ஒப்பந்தக்காரர்கள் சுங்கவரி வசூல் செய்து வருகிறார்கள். 
1. தூத்துக்குடி சுங்கச் சாவடியில் இருந்து துறைமுகம் செல்லும் நான்கு வழிச்சாலையில் சுங்கச் சாவடி எல்கை முடியும் இடத்திற்கு முன்பு சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள மீளவிட்டான் இரயில்வே பாலம் வருகின்ற இடத்தில் பல ஆண்டுகளாக ஒரு வழியில் பாலம் கட்டப்படவே இல்லை.
2. பயன்பாட்டில் இருக்கின்ற பாலமும் பக்கவாட்டுச் சுவர் தாங்குகின்ற இடங்களில் உள்ள மணற்சுவர்களும் அரிக்கப்பட்டு அந்த இடத்தில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ஒரு பிரிவில் சாலைகளே இல்லை. ஒரு வழிப்பாதையாக மிகவும் குறுகிய சாலையாகத்தான் இருக்கிறது. எனவே அந்த பகுதியில் செல்கின்ற கனரக வாகனங்க்ள மற்றும் பிற வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் இந்த ஒரே வழிப் பாதையை பயன்படுத்தி வருவதால் அந்தப் பகுதியில் அடிக்கடி பல விபத்துகள் ஏற்பட்டு அதிகமான மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.
3. துறைமுகம் சென்று வருகின்ற பல ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்லும் இந்த குறுகலான இடத்தில் சாலையில் தடுப்புச் சுவர்கள் கிடையாது. சாலை இல்லை என்ற தகவல் பலகையில் மின் விளக்குகள் இல்லை. ஒளியினை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களும் இல்லை. சாலையில் மின்விளக்கு வசதிகளும் இல்லை. எனவேதான் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் உயிர்களை இழந்து பலியாகி இருக்கிறார்கள்.
4. கடந்த இரண்டு நாட்;களுக்கு முன்பாக கூட இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதற்கு இந்த இடத்தில் பல ஆண்டுகளாக பாலகட்டுமான பணிகளை முடிக்காமல் இருப்பதே காரணமாகும். எனவே இந்த இடம் உயிர்பலி பீடமாக மாறி வருகிறது. 
5. கடந்த 25.07.2016 வரை தொடர்ந்து பல மனுக்கள் கொடுக்கப்பட்டும், அரசு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பாலப்பணிகள் முடிவடையாமல் இருந்தாலும் சுங்கவரி ஒப்பந்தக்காரர்கள் இதுவரை தொடர்ந்து சுங்கவரி வசூல் செய்து வருவதால் அவர்களும் இந்த பாலம் குறித்து எந்தவிதமான மேல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. எனவே இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். 
6. நான்கு வழிச்சாலைகளிலிருந்து பல ஊர்களுக்கு பிரிந்து செல்லும் சாலை முகப்புகளில் மின் விளக்குகள் எரியவில்லை. பல இடங்களில் மின் விளக்குகளே அமைக்கப்படவில்லை சர்விஸ் ரோடுகளிலும் மின்விளக்குகள் இல்லை. 
7. நான்கு வழிச்சாலையின் இருபுறங்களிலும் பராமரிப்பு வேலைகள் நடைபெறாததால் மணல் குவியல்கள் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. காற்றுக்காலங்களில் இந்தச் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் மணல்கள், தூசிகள் விழுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
8. நான்குவழிச்சாலைகளில் ஒப்பந்த விதிகளின்படி கழிப்பிட வசதிகள் செயல்படவில்லை. இருக்கின்ற கழிப்பிடங்குளும் தண்ணீர் வசதியின்றி எந்தவித பராமரிப்புமின்றி உபயோகப்படுத்த முடியாத நிலையில் சுகாதாரமின்றி சீரழிந்து கிடக்கிறது.
9. நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் சாலையின் நடுவிலும், பக்கவாட்டிலும் மேடு, பள்ளங்கள் உருவாகி உள்ளது. ஒப்பந்தக்காரர்கள் சாலைகளை சரியாக பராமரிக்காததால், மேடு பள்ளங்கள் அதிகமாகி பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் பல மனித உயிர்கள் பலியாகி உள்ளது.
10. நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள பாலங்களிலும், நான்கு ரோடு பிரிவுகளிலும், ஊர்கள் பிரிகின்ற பிரிவுச்சாலைகளிலும் மின்விளக்கு வசதிகள் சரியாக அமைக்கப்படவில்லை. இருக்கின்ற மின்விளக்குகளும் சரியாக எரிவதில்லை. முகப்பு விளக்குகள், சிக்னல் விளக்குகளும் எரிவதில்லை. எனவே இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.
11. நான்கு வழிச்சாலையின் பல இடங்களில் இருப்பக்கங்களிலும் வைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் சரிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் பலவீனமாக உள்ளது. இவை பராமரிக்கப்படவே இல்லை.
12. நான்கு வழிச்சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்கள் பல இடங்களில்  இடிந்து காணப்படுகிறது. எனவே இருசக்கர வாகனங்கள் அந்த இடத்தினை சாலைகளை கடப்பதற்கு பயன்படுத்துவதால் தொடர் விபத்துகள் உருவாகி வருகின்றது.
13. நான்குவழிச்சாலைகளில் தடுப்பு சுவர்கள் உள்ள பகுதிகளின் நடுவில் வாகன விளக்குகளின் அதிக ஒளிகளை தடுக்கின்ற வகையில் செடிகளை வளர்க்கவே இல்லை. இது விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.
நான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின்படி எந்த பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே மேற்கண்ட குறைகளை சரிசெய்கின்ற வரையிலும், மீளவிட்டான் அருகில் உள்ள இரயில்வே மேம்பாலத்தினையும் கட்டி முடித்து போக்குவரத்தினை சீர்படுத்தி விபத்துக்களை தடுக்கின்ற வரையிலும் சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்து பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் பாதுகாப்பாக இருந்து உதவும்படி இவ்வாறு அவர் கூறியுள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo