பழைய பொருள்களை எரிக்காதீர் ;மாநகராட்சி மூலம் குப்பைகளை அகற்ற வாரீர் ;கரம் கோர்ப்போம் ;தூய்மையான தூத்துக்குடி ;போகியன்று பொருட்களை எரிக்காமல் முறையாக சேகரித்து அப்புறப்படுத்த ஒத்துழைக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் முனைவர். வீ.ப.ஜெயசீலன், வேண்டுகோள்
தூத்துக்குடி 2021 ஜனவரி 11; தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் முனைவர். வீ.ப.ஜெயசீலன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.....
தூத்துக்குடி மாநகரில் போகி திருநாள் அன்று (13.01.2021-அன்று காலை 08.00 மணி முதல் மாலை மணி வரை) வீடுகளுக்கு வெளியில் தெருக்களில், பொது இடங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட முழுவதும் சுற்றுப்புறத் தூய்மையாக்கல் நிகழ்வினை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
எனவே அந்தந்த பகுதிகளில் இருக்கும் பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள் இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்று போகியன்று பொருட்களை எரிக்காமல் முறையாக சேகரித்து அப்புறப்படுத்துவதில் தங்களை இப்பணியில் மாநகராட்சியுடன் இணைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகறிது. அந்தந்த பகுதிகளில் குறிப்பிட்ட இடத்தில் குப்பைகளை சேகரித்து வைக்கவேண்டும் பின்பு வரும் சிறப்பு வாகனங்களில் மாநகராட்சி மூலம் குப்பைகளை எடுத்து சென்று முறையாக அப்புறப்படுத்தப்படும். மேற்படி பணியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன அமைப்புகள், குடியிருப்பு நல சங்கங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு புகையில்லா போகி கொண்டாட ஆணையர் மற்றும் தனி அலுவலர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், வேண்டுகோள் விடுத்துள்ளார்.