Onetamil News Logo

காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.   

Onetamil News
 

காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.   


 தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 3 ;       தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 
கடந்த 28.07.2020 அன்று தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி சண்முகராஜ் என்பவரை சம்பவம் தெரிந்த 4 மணி நேரத்திற்குள் கைது செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் திரவியராஜ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் பென்சிங், தூத்துக்குடி தெற்கு போக்குவரத்து பிரிவு காவலர் முத்துராஜ்; ஆகியோரின் சிறந்த பணிக்காகவும், 
கடந்த 29.07.2020 அன்று தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் சுமார் 10 வருட காலமாக தலைமறைவாக இருந்து வந்த எதிரிகளான முருகன் என்ற இசக்கிமுத்து(45) மற்றும் அவரது மனைவி பேச்சித்தாய்(40) ஆகியோரை கைது செய்து பிடியாணையை நிவர்த்தி செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, தூத்துக்குடி சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுதாகரன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெடரரிக் ராஜன், தட்டார்மடம் காவல் நிலைய காவலர் மணிகண்டன், செய்துங்க நல்லூர் காவல் நிலைய காவலர் காசி, ஆயுதப்படை காவலர்  ரகு ஆகியோரின் சிறந்த பணிக்காகவும், 
கடந்த 25.07.2020 அன்று சாதிரீதியாக மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் குறுஞ்செய்திகளை அனுப்பி சட்டம் ஒழுங்கு பிரச்சனை எற்படுத்த முயன்ற  புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த கல்ராமன் என்ற வேல்முருகன்(30) என்பவரை கைது செய்த புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சரவண பெருமாள், உதவி ஆய்வாளர் முத்துராஜா, தனிப்பிரிவு காவலர் சாமிக்கண் ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்,
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த அழகுசுந்தரம் மனைவி நீலா என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக கணவருடன் கருத்து வேறுபாடு கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனது இரு குழந்தைகளுடன் கோவில்பட்டி ஆவல்நத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்ததை கண்ட கோவில்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  பத்மாவதி, பெண் காவலர்கள் வசந்தி மற்றும் செல்வி ஆகியோர் நீலாவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும், உறவினர்களுக்கு தகவல் கொடுத்து மேற்படி நீலா மற்றும் அவரது இரு குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து சிறப்பாக பணியாற்றியமைக்காகவும்,
கடந்த 31.07.2020 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாணல் காட்டான்குளத்தைச் சேர்ந்த சத்தியஜோதி(12), ஹரிசிவகணேஷ்(10) மற்றும் ஸ்ரீதர்(8) ஆகிய மூன்று குழந்தைகளை காணவில்லை என வல்;லநாடு புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த சில நிமிடங்களுக்குள் விரைவாகவும் திறம்படவும் செயல்பட்டு திக்குமுக்கு தெரியாமல் வல்லநாடு பஜார் அருகில் நின்று கொண்டிருந்த மேற்படி மூன்று குழந்தைகளையும் கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர்கள் ராபர்ட், சுரேஷ்குமார், தலைமைக் காவலர் ரவி, காவலர்கள் கோகுலகிருஷ்ணன், பெரும்படையான் ஆகியோர் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும்   
மேற்படி காவல்துறை ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்; ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo