Onetamil News Logo

ரேசன் பொருட்கள் பெற பொதுமக்களுக்கு டோக்கன்கள் வீடுகளில் வழங்கப்படும் - பொது மக்கள் டோக்கன் பெற ரேசன் கடைகளுக்கு செல்லக் கூடாது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல்

Onetamil News
 

ரேசன் பொருட்கள் பெற பொதுமக்களுக்கு டோக்கன்கள் வீடுகளில் வழங்கப்படும் - பொது மக்கள் டோக்கன் பெற ரேசன் கடைகளுக்கு செல்லக் கூடாது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல்


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 1 ; தூத்துக்குடி மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் பெற பொதுமக்களுக்கு டோக்கன்கள் வீடுகளில் வழங்கப்படும் - பொது மக்கள் டோக்கன் பெற ரேசன் கடைகளுக்கு செல்லக் கூடாது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவரது அறிவிப்பு   ;தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000/- கொரானா வைரஸ் நிவாரணத் தொகையும், ஏப்ரல் மாதம் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள். கொரானா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேசன் கார்டுதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் ஒரு நாளைக்கு 100 நபர்கள் வீதம் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் 02.04.2020 முதல் வழங்கப்படவுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் கடைக்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து அலுவலர்கள் வீடுவீடாக வந்து டோக்கன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எனவே  யாரும் டோக்கன் பெற நியாய விலைக் கடைக்கு செல்ல கூடாது என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. நியாய விலைக் கடைகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை பொருட்கள் வழங்கப்படும்.  நியாய விலை கடை பகுதியில் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். நியாய விலைக் கடைகளில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், வீட்டிலேயே இருக்க வேண்டும் என தனிமைபடுத்தப்பட்டவர்கள், கொரானா பாதிக்கப்பட்ட பகுதியில் வெளியேற தடை செய்யப்பட்டுள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் ரேசன் பொருட்கள் மற்றும் கொரானோ காய்ச்சல் நிவாரணத் தொகைகள் வீட்டிலேயே வழங்கப்படும்.  பொதுமக்கள்  அனைவரும் மாவட்ட நிர்வாகம் கொரானா தொற்ற ஏற்படாமல் தடுக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo